மதுரை மக்களவை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட் பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பி. மோகன் ஏற்கெனவே 1999, 2004-ம் ஆண்டுகளில் மதுரை தொகுதியில் இருந்து வெற்றி பெற்று நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக பணியாற்றியுள்ளார். நாடாளுமன்றத்தின் பாதுகாப் புத்துறை மற்றும் அயல்துறை நிலைக் குழுக்களின் உறுப்பினராக செயல்பட் டுள்ளார். 14-வது மக்களவையில் தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப் பட்டு சிறப்பாக செயல்பட்ட உறுப்பினர் என்று பல்வேறு பத்திரிகைகள் இவரது பணியை பாராட்டியுள்ளன.
மதுரை மாநகர மக்களின் பிரச்சனைகளுக்காக ஏராளமான போராட்டங்களில் பங்கு கொண்டவர். தமிழ் நாட்டின் மக்கள் பிரச்சனைகளை மக்களவையில் தொடர்ந்து எழுப்பி வந்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது. மாணவப் பருவத்திலேயே தனது பொது வாழ்க்கையை துவக்கி யவர். 1973-ம் ஆண்டில் மார்க்சிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
மக்கள் போராட்டங்களில் பங் கேற்று 6 முறை சிறை சென்றுள்ள இவர், 52 நாட்கள் சிறையில் இருந்துள் ளார். இவர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது இது 6-வது முறையாகும். மதுரையில் ரூ.150 கோடி செலவில் சிறப்பு ஆராய்ச்சி மருத்துவமனை, மதுரை - திண்டுக்கல் அகல ரயில் பாதை, சர்வதேச தரத்தில் மதுரை விமான நிலையம், மதுரையில் பாஸ் போர்ட் அலுவலகம் உள்ளிட்ட நீண்ட நாள் கோரிக்கைகள் இவரது முன்முயற்சியால் நடைமுறைக்கு வந் துள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக